search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத் தகராறு"

    • நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.

    நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

    இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.

    இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
    • இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது குடும்பத்திற்கும் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மனைவி வசந்தா, மூர்த்தி, மணி இவரது மனைவி சுகன்யா ஆகியோர் மீதும், அண்ணாமலை மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி லதா, மகன்கள் அருண், சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செஞ்சியில் பரபரப்பு நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிப்பை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70) விவசாயி அதே பகுதியில் பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை ஆண்டு தோறும் டெண்டர் முறையில் ஏலம் விடுவார்கள். தற்போது டெண்டர் முறையில் விடப்பட்ட அந்த நிலத்தை தர்மராஜ் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மறு ஏலம் விடப்பட்டது. அந்த மறு ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் அதிகமான தொகைக்கு கேட்டதால் அவருக்கு நிலம் டெண்டர் முறையில் விடப்பட்டது. 

    இன்று காலை அரங்க நாதன் அந்த நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு தர்மராஜ் இருந்தார். நடைபெற்ற டெண்டர் ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் அரங்கநாதன் தர்மராஜை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தர்மராஜ் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் டி.எஸ்பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தர்மராஜின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரங்கநாதனை தேடி வருகின்றனர். 

    ×